top of page
Arulmathi S

TNPSC G2- கார்பன் தடம்,வர்த்தகம், கரிமத் தன்மயமாக்கல் - சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து எழுக

Important terms


Carbon trading

Carbon Credits

Carbon sequestration

Carbon footprint

Carbon emission trading CET

Carbon tax


கரிம வணிகம்:( carbon trading)


ஒரு நாடோ தொழிற்சாலையும் தான் வெளியிடாத காரியம் இல்ல வாயுவின் அளவை கிரெடிட் ஆக மாற்றி அதை அதிகமாக மாசுக்களை வெளியிடும் நாட்டிற்கோ தொழிற்சாலைகளுக்கோ விற்பதே கார்பன் வணிகம்.


வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகளில் கரிம வெளியீட்டைக் குறைத்துக்கொள்வதற்கு பணம் கொடுக்கிறார்கள். அதன்மூலம், ஒரு வளரும் நாடு வெளியிடாத கரிம அளவை வளர்ந்த நாடு வாங்கிக்கொண்டு, அந்த அளவை அது வெளியிட்டுக்கொள்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம் பசுமை இல்ல வாயுக்களை வெளியீடு குறைக்கப்படுவதைப் பணம் கொடுத்து வாங்கிக்கொள்ள முடிகிறது.


உலகளாவிய கார்பன் சந்தைக்கான விதிகள் நவம்பர் 2021 இல் கிளாஸ்கோ COP26 காலநிலை மாற்ற மாநாட்டில் நிறுவப்பட்டன. 2015 பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் முதன்முதலில் அமைக்கப்பட்ட ஒப்பந்தத்தை இயற்றியது.


தொழில்மயமான நாடுகள் தங்கள் CO2 உமிழ்வின் அளவைக் குறைக்க வேண்டும் என்பதே கியோட்டோ நெறிமுறையின் அடிப்படைக் கொள்கையாகும் .


கழிவுகளிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையத்தின் மூலம், சுமார் 1,000 டன் கரிம வெளியீட்டைக் குறைக்கிறார். அதற்கு, கரிம வெளியீடு குறைப்பு (Carbon Emission Reduction), என்ற சான்றிதழைப் பெறுகிறார். அவர் குறைத்த அந்த 1,000 டன் கரிமத்தை வேறொருவருக்கு விற்றுவிடுகிறார். ஒரு டன் கரிம வெளியீடு குறைப்பின் விலை சராசரியாக 80 யூரோ (அதிகபட்சமாக 109 டாலர் வரை).


கரிமத் தன்மயமாக்கலை ( Carbon capture & Carbon Sequestration)


கரிம வெளியீடு நிகழாமல் குறைப்பதைப் போலவே, ஏற்கெனவே வளிமண்டலத்தில் இருக்கும் கரிமத்தைப் பிடித்து, நிலத்தில் கரிமத் தன்மயமாக்கலை (Carbon Sequestration) செய்வதன் மூலமும், கரிம வர்த்தகத்தில் ஈடுபட முடியும். எவ்வளவு டன் கரிமத்தை கிரகிக்கிறார்களோ, அதைப் பொறுத்து விலை இருக்கும்.

இதை அங்கீகரிக்க, வெரிஃபைட் கார்பன் ஸ்டேண்டர்ட் (Verified Carbon Standard), க்ளைமேட் ஆக்‌ஷன் ரிசர்வ் (Climate Action Reserve) போன்ற சில தன்னிச்சையான அமைப்புகள் இருக்கின்றன. அவர்கள் அங்கீகரித்து கரிம வெளியீடு குறைப்பு சான்றிதழ் கொடுப்பார்கள். அந்தச் சான்றிதழை வைத்து, கரிம வர்த்தகத்தில் ஈடுபடலாம்.

இந்தியாவில் கரிம வெளியீட்டைப் பொறுத்தவரை, இவ்வளவுதான் வெளியிட வேண்டும் என்று வழிகாட்டுதல் உள்ளது , கடுமையான கட்டுப்பாடுகள் வரவில்லை. இப்போது கரிம வர்த்தகத்தில், இந்தியாவில் இருப்பவர்கள் வெளிநாடுகளுக்கு விற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஐரோப்பிய யூனியனில் அதிகக் கட்டுப்பாடுகள் இருப்பதால், வணிகம் மேற்கொள்ளப்படுகிறது. இந்தியாவில் இதற்கான சந்தை இதுவரை இல்லை.


கரிம வெளியீட்டு வர்த்தக அமைப்பு (Emissions trading system, ETS)


சீனா தன்னுடைய தேசிய கரிம சந்தையான, கரிம வெளியீட்டு வர்த்தக அமைப்பைத் (Emissions trading system, ETS) தொடங்கியது. இது, 2060-ம் ஆண்டுக்குள் சீனாவின் கரிம சமநிலையை அடைய உதவுவதோடு, பசுமை வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று கூறப்படுகிறது. சுமார் 3,000 ஆற்றல் உற்பத்தி நிறுவனங்கள் இதில் இணைந்துள்ளன. கரிம சந்தையில், சுமார் 1.6 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான 440 மில்லியன் டன் கரிம வெளியீடு இந்த வர்த்தகத்தில் ஈடுபடுத்தப்படும்.


கார்பன் தடம் ( Carbon Footprint)


கார்பன் டை ஆக்ஸ்டைடு உள்ளிட்ட பசுமை வாயுக்கள் மனித செயல்பாடுகள் மூலம் வளிமண்டலத்தை அடைவதை நாம் கார்பன் தடம் அல்லது கார்பன் ஃபுட்ப்ரிண்ட் என்று அழைக்கின்றோம்.


ஒரு தனிநபரின் கார்பன் தடம் ( Carbon Footprint)மதிப்பிடுவதற்கான மொபைல் பயன்பாடான கார்பன் வாட்சை அறிமுகப்படுத்திய இந்தியாவின் முதல் மாநிலம் அல்லது யூனியன் பிரதேசமாக தற்போது சண்டிகர் உள்ளது.

சண்டிகரில் 1000 நபர்களுக்கு 878 நபர்களிடம் வாகனங்கள் உள்ளன. மொத்தமாக 11 லட்சம் மக்கள் தொகையை கொண்டுள்ளது இந்த தலைநகரம்.


கார்பன் வரி ( carbon tax)


கார்பன் வரி என்பது அதிகப்படியான பசுமை இல்ல வாயு வெளியேற்றத்திற்கு வணிகங்கள் செலுத்த வேண்டிய ஒரு வகை அபராதமாகும். பொதுவாக ஒரு டன் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்திற்கு வரி விதிக்கப்படுகிறது.

இவை அனைத்தும் காலநிலை மாறுபாட்டை கட்டுப்படுத்தவும் உலக வெப்பமயமாக்களை சீராக்கவும் கொண்டுவரப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக இருந்தாலும் இந்த வர்த்தகம் அதிகரிக்கும் பொழுது வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளிடையே வேறுபாடுகள் அதிகரிக்கும்.


Clean Development Mechanism

மாசில்லா வளர்ச்சி நெறிமுறை:


கார்பன் உமிழ் வை கட்டுப்படுத்தும் உயரிய குறிக்கோள் வெறும் வாணிப நோக்கில் மாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

கார்பன் கிரெடிட்ஸ் இவற்றின் விலை அதிகரிக்கும் பொழுது வளரும் நாடுகள் அதிகமாக செலவிட முடியாத ஒரு நிலைக்குத் தள்ளப்படும் பின்னர் தங்களுடைய உற்பத்தி முறைகளையும் தொழிற்சாலைகளையும் அவற்றில் உள்ள தொழில்நுட்பங்களையும் ( CDM - Clean Development Mechanism) என்ற தொழில் நுட்பத்தில் தங்களுடைய முதலீட்டை அதிகரித்து உலக வெப்பமயமாதலுக்கு விரைவில் ஒரு தீர்வைக் காண முடியும்.




48 views0 comments

Recent Posts

See All

TNPSC G2-பெரும் தரவு பகுப்பாராய்ச்சி முறை என்றால் என்ன? அதன் பயன்கள் , செயல்பாடுகள் குறித்து எழுதுக

What is Big Data? Big Data Analytics , uses and applications of Big Data. பிக் டேட்டா என்பது ஒவ்வொரு நாளும் நாம் நீந்திக் கொண்டிருக்கும்...

TNPSC Group 2 Mains தொல்லியல் துறையில் கதிரியக்க கரிம காலக் கணிப்பின் பயன்பாட்டினை விளக்குக.

Uses of Radio carbon dating in archeological excavations . ரேடியோ கார்பன் டேட்டிங் (கதிரியக்க கரிம கால கணிப்பு) என்பது தொல்லியல் மற்றும்...

TNPSC - தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் செயல்பாடுகள் , அதிகாரங்கள் குறித்து எழுதுக.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) என்பது தமிழ்நாட்டில்( சென்னையில்) 1982 இல் நிறுவப்பட்ட ஒரு சட்டரீதியான அமைப்பாகும் . நீர்...

Comments


bottom of page