top of page

TNPSC Group 2 Mains தொல்லியல் துறையில் கதிரியக்க கரிம காலக் கணிப்பின் பயன்பாட்டினை விளக்குக.

Uses of Radio carbon dating in archeological excavations .


ரேடியோ கார்பன் டேட்டிங் (கதிரியக்க கரிம கால கணிப்பு)

என்பது தொல்லியல் மற்றும் சுற்றுச்சூழல் துறைகளில் விஞ்ஞான பூர்வமாக தொல்பொருளின் அல்லது கரிமப் பொருட்களின் வயதினை மெய்ப்பிக்க மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் சோதனை முறை.


ரேடியோ அலைகள் மூலம் கரிமப் பொருட்களின் கார்பன் அளவை அறிந்து அதன் மூலம் வயதினை சொல்லும் முறை.


சமதானி அல்லது ஐசோடோப்பு (Isotope)


ஒரே அணுவெண்ணையும் வேறுபட்ட திணிவெண்ணையும் கொண்ட ஒரே மூலக அணுக்கள் ஐசோடடோப்பு அல்லது சமதானி எனப்படும். (புரோட்டான்) ஒரே அளவிலும், (நியூட்ரான்) எண்ணிக்கை வேறுபட்டும் இருக்கும்.


அண்டக் கதிர்வீச்சால் (Cosmic rays) பாதிப்படைந்த நைட்ரஜன் 14 ஐசோடோப்பு (Nitrogen 14 Isotope) மூலம் மேல் வளிமண்டலத்தில் (Upper atmosphere) ரேடியோ கார்பன் உற்பத்தியாகிறது. இந்த ரேடியோ கார்பன் 14 அணுக்கள் (Radio carbon 14 atoms) சூரிய வெளிச்சத்தின் உதவியோடு ஒளிச் சேர்க்கை (photosynthesis) மூலம் எல்லா தாவரங்களாலும் உட்கிரகிக்கப்படுகின்றன (absoroption).


இத்தாவரங்களை உண்ணும் அனைத்து உயிரினங்களின் உடல்களிலும் இரசாயன மாற்றம் நிகழ்கிறது.


கதிரியக்கம் காரணமாகப் படிப்படியாக அழிகின்ற கரிமம்-14 இன் அரைவாழ்வுக் காலம் 5730 ( half life period) ஆண்டுகள். ஒவ்வொரு முறையும் கரிம கார்பனின் அளவு பாதியாக குறைவதற்கு இத்தனை காலங்கள் எடுத்துக் கொள்ளும்.



வில்லியர்ட் ஃபிராங்க் லிபி (Willard Frank Libby )என்ற ரசாயனத்துறை பேராசிரியர் 1949 ம் ஆண்டு கரிமத் தொல்பொருட்களின் (organic artifacts) வயதை மெய்ப்பிக்க ரேடியோ கார்பன் டேட்டிங் சோதனை முறையைக் கண்டறிந்தார். இதற்காக அவர் நோபல் பரிசை வென்றார்.


இந்திய தொல்லியல் துறையினர் (ஏ.எஸ்.ஐ) (Archaeological Survey of India (ASI) தங்கள் மாதிரிகளை (samples) ஹைதராபாத் மற்றும் அஹமதாபாத்தில் உள்ள தேசிய ஜியோபிசிக்கல் ஆய்வுக்கூடங்களுக்கும் (National Geophysical Research Laboratory) லக்னோவில் உள்ள பீர்பால் சஹானி பாலியோபாட்டனி ஆய்வுக்கூடத்திற்கும் (Birbal Sahni Institute of Palaeobotany (BSIP), அனுப்பி சோதனை முடிவுகளைப் (Test Results) பெறுகிறார்கள். ஒவ்வொரு மாதிரிக்கும் 50 முதல் 60 ஆயிரம் ரூபாய்கள் வரை ஏ.எஸ்.ஐ. செலவிடுகிறது.


இந்தியாவில் நவீன கருவிகள் இல்லாத காரணத்தால் ஏ.எஸ்.ஐ. அமெரிக்கா போன்ற வெளிநாட்டு ஆய்வகங்களிலிருந்து, தங்கள் மாதிரிகளின் ஆய்வு முடிவுகளைப் பெற சில வருடங்கள் வரைகூட காத்திருக்க வேண்டியுள்ளது.

காந்திநகரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT) கார்பன்-டேட்டிங்கிற்கான ஆய்வகம் ஒன்று தொடங்கப்படும். இந்த ஆய்வகத்தை அமைப்பதற்காக இந்திய தொல்லியல் துறை (ASI) நிதி ஒதுக்குகிறது.


முன்மொழியப்பட்ட ஆய்வகம் நவீன இரசாயன பகுப்பாய்வு மற்றும் கார்பன் டேட்டிங் கருவிகளைப் பயன்படுத்தி தோண்டும்போது மீட்கப்பட்ட நினைவுச்சின்னங்களின் பழமையான தன்மையைக் கண்டறியும். ஆய்வகத்தை அமைப்பதற்கான பட்ஜெட் இன்னும் இறுதி செய்யப்பட்டு வருகிறது.





118 views0 comments

Recent Posts

See All

TNPSC G2-பெரும் தரவு பகுப்பாராய்ச்சி முறை என்றால் என்ன? அதன் பயன்கள் , செயல்பாடுகள் குறித்து எழுதுக

What is Big Data? Big Data Analytics , uses and applications of Big Data. பிக் டேட்டா என்பது ஒவ்வொரு நாளும் நாம் நீந்திக் கொண்டிருக்கும்...

TNPSC - தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் செயல்பாடுகள் , அதிகாரங்கள் குறித்து எழுதுக.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) என்பது தமிழ்நாட்டில்( சென்னையில்) 1982 இல் நிறுவப்பட்ட ஒரு சட்டரீதியான அமைப்பாகும் . நீர்...

コメント


bottom of page