கதிரியக்க பாஸ்பரஸ் ஐசோடோப் (P-32) பயிர் உற்பத்தியை அதிகரிக்கப் பயன்படுகிறது.
பூச்சிகள் மற்றும் ஒட்டுண்ணிகள் போன்ற நுண்ணுயிரிகளால் வேளாண் உற்பத்திப்பொருள்கள் கெட்டுப் போகாமல் நுண்ணுயிரிகளை அழித்து, வேளாண் உற்பத்திப் பொருள்களைப் பாதுகாக்க பயன்படுகின்றன.தக்காளி, காளான்கள், முளைகள் மற்றும் பெர்ரி அனைத்தும் கோபால்ட்-60 அல்லது சீசியம்-137 உமிழ்வுகளுடன் கதிர்வீச்சு செய்யப்படுகின்றன. இந்த வெளிப்பாடு கெட்டுப்போகும் பல பாக்டீரியாக்களைக் கொன்று, உற்பத்தியை நீண்ட காலம் நீடிக்க அனுமதிக்கிறது. முட்டைகள், மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி மற்றும் கோழி போன்ற சில இறைச்சிகள் கதிர்வீச்சு செய்யப்படலாம்.
சேமிக்கப்படும் சிலவகை தானியங்களை கதிரியக்கத்திற்கு உட்படுத்தி, அவைகளை நீண்ட நாள்களுக்கு அதே புதுத் தன்மையோடு பயன்படுத்திட இயலும்.( Shelve life period increased)
சிறிதளவு கதிர்வீச்சின் மூலம் வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றை அழுகிப் போகாமல் இருக்கச் செய்ய பயன்படுகிறது.
பூச்சிகள் மற்றும் ஒட்டுண்ணிகளால் வேளாண் உற்பத்தி பொருட்கள் கெட்டு போகாமலும், பருப்பு வகைத் தானியங்களைச் சேமிப்புக் காலத்தில் முளைவிடாமல் பாதுகாக்கவும் இயலும்.
TNPSC Group 2 Mains வேளாண்மைத் துறையில் கதிரியக்க ரேடியோ ஐசோடோப்புகளின் பயன்களை எழுதுக.
Updated: Dec 29, 2022
Comments