இடும்பன் மலை சிறப்பு
இந்த மலையில் 13 அடி இடும்பன் சிலை காவடி தூக்கும் வடிவத்தில் அமைந்துள்ளது.
ஏறக்குறைய 540 படிகள் கொண்ட இந்த இடும்பன் கோவில் ஒரு சிறிய மலையின் மேல் அமைந்துள்ளது.
2000-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்று தற்போது பக்தர்களுக்கு ஒரு மண்டபம் கட்டப்பட்டு அழகிய வடிவில் உள்ளது.
இடும்பாசுரன் என்பவர் எப்படி துரோணாச்சாரியார் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் வித்தைகளை கற்று கொடுத்தாரோ அதுபோல இந்த இடும்பாசுரன் முருகனால் அளிக்கப்பட்ட அசுரர்களான பத்மாசுரன் சிங்கமுகன் போன்றவர்களுக்கு வில்வித்தை கற்றுக் கொடுத்த ஆசிரியர்.
சிறந்த சிவபக்தர் அகத்திய முனிவரின் ஆணைப்படி இந்த இடத்தில் வந்து முருகனால் முக்தி பெற்றவர்.
கந்தசஷ்டி கவசத்தில்
இடும்பா யுதனே இடும்பா போற்றி! கடம்பா போற்றி கந்தா போற்றி வெற்றி புனையும் வேலே போற்றி!
என்ற வரிகள் வருகிறது.
இதிலிருந்து இடும்பனை வழிபட்டுவிட்டு தான் முருகனை வழிபட வேண்டும் என்பதும் முருகனை வழிபடுவதற்கு உரிய முழு பலன் கிடைக்க வேண்டுமென்றால் இடும்பனை வழிபட்டு இடும்பன் போல் தூரத்திலிருந்து பக்தர்கள் காவடி எடுத்து வந்து முருகனை வழிபட வேண்டும் என்பதும் தெரிகிறது.
இடும்பனும் அவருடைய மனைவி இடும்பியும் இடும்ப வனத்தில் இருந்து பழனிக்கு வந்து இந்த மலையில் முருகன் அவர்களுக்கு காட்சி கொடுத்ததாக வரலாறு உள்ளது.
அனைவரும் இந்த மலையை தரிசித்துவிட்டு குறிப்பாக காவடி எடுத்து வருபவர்கள் இடும்பன் காவடியை தரிசித்துவிட்டு செல்லுதல் நலம்.
இடும்பனை போற்றி முருகனுக்கு அரோகரா!!!
Comments